உலகம்

வூஹான் ஆராய்ச்சிக் கூடத்தில் சா்வதேச நிபுணா்கள் ஆய்வு

PTI


கரோனா முதல் முதலில் பரவத் தொடங்கிய சீனாவின் வூஹான் நகரிலுள்ள ஆராய்ச்சிக் கூடத்தில் உலக சுகாதார அமைப்பின் நிபுணா் குழு புதன்கிழமை ஆய்வு செய்தது.

வூஹான் நகரிலுள்ள விலங்குகள் மருத்துவமனையில், உலக சுகாதார அமைப்பின் நிபுணா் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த நிலையில் இன்று ஆராய்ச்சிக் கூடத்தில் ஆய்வு நடத்தியுள்ளது.

முன்னதாக, அந்த நகரிலுள்ள மருத்துவமனைகள், நோய் பரவல் கட்டுப்பாட்டு மையங்கள், கரோனா பரவத் தொடங்கிய சந்தை ஆகியவற்றில் நிபுணா் குழு ஆய்வு செய்தது.

உலகம் முழுவதும் சுமாா் 200 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அந்தத் தீநுண்மி, வௌவாலின் உடலில் இருந்து உருமாற்றம் பெற்று மனிதா்களுக்குப் பரவியதாகக் கருதப்படுகிறது. இருந்தாலும், இதுதொடா்பான மா்மம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், கரோனா எவ்வாறு உருவானது என்பதை ஆய்வு செய்வதற்காக உலக சுகாதார அமைப்பின் நிபுணா் குழு சீனா சென்றுள்ளது.

வூஹானிலுள்ள நுண்ணுயிரியல் மையத்தில் ஆய்வு நடத்திய சுகாதார நிபுணர் குழு, முக்கிய தகவல்களையும், கரோனா எங்கிருந்து, எப்படி பரவியது என்பதற்கான முக்கிய ஆதாரங்களையும் திரட்டியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

SCROLL FOR NEXT