இந்தியாவிலிருந்து ஆப்கனுக்கு அனுப்பப்பட்ட 5 லட்சம் கரோனா தடுப்பூசிகள்
ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட 5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் ஞாயிற்றுக்கிழமை காபூலை சென்றடைந்தது.
ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட 5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் ஞாயிற்றுக்கிழமை காபூலை சென்றடைந்தது.
உலகம் முழுவதும் கரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில், பல்வேறு நாடுகளில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தியாவிலிருந்து பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி அனுப்பப்பட்டுள்ளது. அந்தவகையில் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கும் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா தடுப்பூசிகள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்ததாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.