ரஷியாவில் ஒரேநாளில் 432 பேர் பலி
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,048 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 432 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,048 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 432 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா இரண்டாம் அலையால் ரஷியாவில் கரோனா பாதிப்பு கடந்த ஒரு சில மாதங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, புதிதாக 16,048 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 39,67,281 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 2,028 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
ரஷியாவில் கரோனா தொற்றுக்கு மேலும் 432 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 76,661 ஆக அதிகரித்துள்ளது.
தற்போதுவரை 34,56,210 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், இன்றைய நிலவரப்படி 4,34,410 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா, பிரேசிலைத் தொடர்ந்து ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.