முகப்பு
உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 10.66 கோடியாக உயர்வு

உலகளவில்  கரோனா நோய்த்தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 10.66 கோடியாக உயர்ந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:29 PM
Globally, corona damage increased to 10.66 crore
பகிர்:

உலகளவில்  கரோனா நோய்த்தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 10.66 கோடியாக உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

திங்கள்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 10,66,91,355 பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. அவர்களில் 23,27,353 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 7,83,79,809 பேர் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,58,38,077 போ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 1,03,716 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Advertisement

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,76,11,403 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 4,74,933 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,08,38,843 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1,55,114 பேர் உயிரிழந்துள்ளனர். 

மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 95,24,640 ஆக உயர்ந்துள்ளது. உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,31,561 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments