மெக்சிகோவில் 170,000-ஐ தாண்டியது கரோனா பலி
மெக்சிகோவில் கரோனா பலி எண்ணிக்கை 170,000-ஐ தாண்டியுள்ளது.
மெக்சிகோவில் கரோனா பலி எண்ணிக்கை 170,000-ஐ தாண்டியுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10,677 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,68,566ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,474 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,71,234ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து 1.52 மில்லியன் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.