உலகம்

ஜப்பான் நிலநடுக்கம்: உற்பத்தியை நிறுத்திய டொயோட்டா நிறுவனம்

DIN

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஜப்பானில் உள்ள டொயோட்டா நிறுவனம் தங்களது உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

ஜப்பானில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, கட்டடங்கள் இடிந்து, சாலைகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில், 120 பேருக்கு காயம் ஏற்பட்டது.

நிலநடுக்க அபாயம் நிறைந்த ஃபுகுஷிமா, மியாகி பகுதிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கம்  ரிக்டா் அளவுகோலில் அது 7.3 அலகுகளாகப் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில் பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான டொயோட்டா ஜப்பானில் உள்ள தங்களது உற்பத்திக் கிளைகளில் தற்காலிகமாக வாகன உற்பத்தியை நிறுத்தியுள்ளது. ஐச்சி, இவாட் மற்றும் ஃபுகுயோகா உள்ளிட்ட ஐந்து மாகாணங்களில் உள்ள உள்நாட்டு தொழிற்சாலைகளில்  உற்பத்தி நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் டொயோட்டாவின் தொழிற்சாலைகளில் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்படவில்லை என்றாலும் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை விநியோகிப்பதில் சிக்கலை உண்டுபண்ணியதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT