முகப்பு
உலகம்

கரோனா தரவுகளில் வெளிப்படைத் தன்மை அவசியம்: பிரிட்டன் பிரதமர்

உலக அளவில் கரோனா தொற்று பரவல் தொடர்பான தரவுகளில் வெளிப்படைத் தன்மை அவசியம் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
பகிர்:

உலக அளவில் கரோனா தொற்று பரவல் தொடர்பான தரவுகளில் வெளிப்படைத் தன்மை அவசியம் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

கரோன தொற்று பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும்  பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பிரிட்டன் நாட்டில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கரோனா தொற்றுநோய் தொடர்பான உலகளாவிய ஒப்பந்தத்தில் இணைய பிரிட்டன் தயாராக இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Advertisement

கரோனா தொற்று பரவல் தொடர்பான தரவுகளைப் பகிர்ந்து கொள்வதில் உலக நாடுகளிடையே வெளிப்படைத் தன்மை தேவை என்று வலியுறுத்தியுள்ள அவர் இதுகுறித்த கூட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

கரோனா தோற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக் குழு சீனா சென்றுள்ள நிலையில் பிரிட்டன் பிரதமர் தெரிவித்துள்ள கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments