உலகம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் முதல் பலி

DIN

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் தலையில் குண்டடிபட்டு சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் மரணமடைந்தார்.

மியான்மரில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டு ஓராண்டுக்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டது. எனினும் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அரசாணையை மீறி மியான்மரில் பல்வேறு நகரங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் நேபிடாவில் நடைபெற்ற போராட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் தலையில் குண்டு பாய்ந்த இளம்பெண் ஆங் சான் சூ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இதனைத் தொடர்ந்து சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார். ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் பலியான முதல் நபரான ஆங் சான் சூவிற்கு நாடு முழுவதும் போராட்டக்காரர்கள் அஞ்சலி செலுத்தினர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

அண்ணாமலைப் பல்கலை. பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT