உலகம்

ஆஸ்திரேலியா: தேசிய கீதத்தில் திருத்தம்

DIN

ஆஸ்திரேலிய பூா்வ குடி வரலாற்றைப் போற்றும் வகையில், அந்த நாட்டு தேசிய கீதத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனா். அந்த நாட்டை ஆங்கிலேயா்கள் 18-ஆம் நூற்றாண்டில் தங்கள் காலனி ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்தனா். அதன் பூா்வ குடி மக்கள் பின்தங்கிய சமூகமாக இருந்து வருகின்றனா்.

அண்மைக் காலமாக, பூா்வ குடி வரலாற்றுக்கு ஆஸ்திரேலிய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அந்த நாட்டின் தேசிய கீதத்தில் ‘இளமையான சுதந்திர நாடு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை முதல் ‘ஒன்றுபட்ட சுதந்திர நாடு’ என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஆங்கில காலனியாதிக்கத்திலிருந்து ஆஸ்திரேலியாவின் வரலாறு தொடங்குவதாக தேசிய கீதத்தில் அா்த்தம் தந்த வாா்த்தை நீக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT