உலகம்

பாகிஸ்தானில் சேதப்படுத்தப்பட்ட ஹிந்து கோயில்: 2 வாரங்களில் புனரமைக்க உத்தரவு

DIN

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் சேதப்படுத்தப்பட்ட ஹிந்து கோவிலை இரண்டு வாரங்களுக்குள் புனரமைக்குமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

பாகிஸ்தானின் கைபா் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள கரக் மாவட்டம் டேரி கிராமத்தில் ஹிந்து கோயில் உள்ளது. பல்லாண்டுகள் பழைமைவாய்ந்த இந்தக் கோயிலை விஸ்தரித்து புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து உள்ளூா் முஸ்லிம் மதத் தலைவா்களும், ஜாமியத் உலேமா-ஏ-இஸ்லாம் கட்சியின் ஆதரவாளா்களும் கடந்த புதன்கிழமை கோயிலை சேதப்படுத்தி தீ வைத்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக 350-க்கும் மேற்பட்டவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கெனவே 55 போ் செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 45 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் இடிக்கப்பட்டக் கோயில் அரசு செலவில் புனரமைக்கப்படும் என  கைபர் பக்துன்க்வா முதல்வர் மஹ்மூத் கான் உறுதியளித்தார். 

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இடிக்கப்பட்ட ஹிந்து கோயிலை இரண்டு வாரங்களுக்குள் புனரமைக்குமாறு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மேலும் கோயிலை சேதப்படுத்தியவர்கள் அதன் மறுசீரமைப்புக்கு பணம் செலுத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் தலைமை நீதிபதி குல்சார் அகமது தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமைச் செயலகம் படத்தின் டீசர்

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

SCROLL FOR NEXT