முகப்பு
உலகம்

சுற்றுச்சூழல் பாதிப்புகளால் இஸ்ரேலில் ஆண்டுக்கு 3000 பேர் பலி

சுற்றுச்சூழல் பாதிப்புகளால் இஸ்ரேலில் ஆண்டுக்கு 3 ஆயிரம் பேர் வரை பலியாகி வருவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
சுற்றுச்சூழல் பாதிப்புகளால் இஸ்ரேலில் ஆண்டுக்கு 3000 பேர் பலி
பகிர்:

சுற்றுச்சூழல் பாதிப்புகளால் இஸ்ரேலில் ஆண்டுக்கு 3 ஆயிரம் பேர் வரை பலியாகி வருவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இஸ்ரேலிய சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார நிதியம் வெளியிட்ட அறிக்கையில் காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களால் நாட்டில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சுற்றுச்சூழல் மாசுபாடுகள் தொற்று நோய் பரவலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கரோனா தொற்று பாதிப்பிலும் காற்று மாசுபாடு முக்கியப் பங்கு வகிக்கிறது.” என அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்னைகள் குறித்து இந்த அறிக்கை சுட்டிக்காட்டியதுடன், சுற்றுச்சூழல் பாதிப்புகளின் விளைவாக சுகாதார சிக்கல்களைக் குறைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் கோடிட்டுக் காட்டியுள்ளது.

"கரோனா வைரஸ் தொற்றுநோயைத் தொடர்ந்து, இஸ்ரேல் உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.காற்று, நீர் போன்றவற்றில் ஏற்படும் மாசுபாடுகளைக் குறைத்து மக்கள் பயன்படுத்தத்தக்க பசுமை நிறைந்த சூழலை உருவாக்க வேண்டும்” எனவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக ஆண்டுக்கு 3 ஆயிரம் பேர் வரை இஸ்ரேலில் இறப்பதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →