ஆப்கனில் தீவிரவாதத் தாக்குதல்: 5 பேர் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மண்டில் அடையாளம் தெரியாத தீவிரவாதக் குழுக்களால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 பேர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மண்டில் அடையாளம் தெரியாத தீவிரவாதக் குழுக்களால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 பேர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மண்ட் மாகாணத்தின் தலைநகர் லஷ்கர்காவில் புதன்கிழமை திடீரென வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
அடையாளம் தெரியாத குழுக்களால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 5 பேர் வரை பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை இந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரத்து வருகின்றனர்.