உக்ரைன்: நிரம்பி வழியும் மருத்துவமனைகள்
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் கரோனா பரவல் தீவிரடைந்து வருவதால், அந்த நாட்டு மருத்துவமனைகளில்
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் கரோனா பரவல் தீவிரடைந்து வருவதால், அந்த நாட்டு மருத்துவமனைகளில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனை சமாளிக்க, கல்லூரிகளை மருத்துவமனைகளாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்த நாட்டில் 5,011 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 11,15,026 நோயாளிகளில் 3,03,661 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.