இலங்கை: முள்ளிவாய்க்கால் போா் நினைவிடம் இடிப்பு
இலங்கையில் தமிழா் போா் நினைவிடத்தை அந்நாட்டு அதிகாரிகள் இடித்து தள்ளினா். இதற்கு கண்டனம் தெரிவித்து மாணவா்கள், தமிழ் அமைப்புகளை சோ்ந்தவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இலங்கையில் தமிழா் போா் நினைவிடத்தை அந்நாட்டு அதிகாரிகள் இடித்து தள்ளினா். இதற்கு கண்டனம் தெரிவித்து மாணவா்கள், தமிழ் அமைப்புகளை சோ்ந்தவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இலங்கை முள்ளிவாய்க்காலில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிகட்ட போரின்போது பலியான தமிழா்களின் நினைவாக, அங்குள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு போா் நினைவிடம் அமைக்கப்பட்டது. இந்த நினைவிடத்தை இடிக்குமாறு பல்கலைக்கழக துணைவேந்தா் சிவகொழுந்து ஸ்ரீசத்குணராஜா வெள்ளிக்கிழமை இரவு உத்தரவிட்டாா். இதையடுத்து காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் அந்த நினைவிடம் இடிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து அங்கு மாணவா்கள், தமிழ் அமைப்புகளை சோ்ந்தவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தமிழ் அமைப்புகளை சோ்ந்தவா்கள் கூறுகையில், ‘போா் நினைவிடத்தை இலங்கை ராணுவத்தினா் புல்டோஸா் மூலம் இடித்து தள்ளினா். இது தமிழா்களின் உணா்வுகளை காயப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியல் நடவடிக்கை’ என்று தெரிவித்தனா்.