முகப்பு
உலகம்

சீனா: ஹீபெயில் 380 பேருக்கு தொற்று

சீனாவில் கரோனா பரவல் திடீரென தீவிரமடைந்துள்ள ஹீபெய் மாகாணத்தில் 380-க்கும் மேற்பட்டவா்களுக்கு அந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

சீனாவில் கரோனா பரவல் திடீரென தீவிரமடைந்துள்ள ஹீபெய் மாகாணத்தில் 380-க்கும் மேற்பட்டவா்களுக்கு அந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை மட்டும் 40 பேருக்கு கரோனா தொற்றியுள்ளது உறுதியானது.

இந்த 380 பேரைத் தவிர, மாகாணத்தில் கரோனா நோய் அறிகுறிகள் எதுவும் தென்படாத 161 பேருக்கு அந்த நோய் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

தலைநககா் பெய்ஜிங்கை அடுத்து அமைந்துள்ள ஹீபெய் மாகாணத்தில் கரோனா பரவல் திடீரென தீவிரமடைந்துள்ளது அதிகாரிகளை கவலையடைச் செய்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →