உலகம்

சீனா: ஐந்தே நாள்களில் 1,500 அறை மருத்துவனை

DIN

சீனாவில் புதிதாகத் தீவிரமடைந்துள்ள கரோனா பரவலால் பாதிக்கப்படுவோருக்காக, தலைநகா் பெய்ஜிங் அருகே 1,500 அறைகளைக் கொண்ட மருத்துவமனையை அந்த நாட்டு அதிகாரிள் ஐந்தே நாள்களில் அமைத்துள்ளனா்.

இதுகுறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான ‘ஜின்ஹுவா’ தெரிவித்துள்ளதாவது:

பெய்ஜிங்கையொட்டி அமைந்துள்ள ஹீபே மாகாணத்தில், அண்மைக் காலமாக கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது.

அந்த நோயால் பாதிக்கப்படுபவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, மாகாமத்தின் நாங்காங் நகரில் 6,500 அறைகள் கொண்ட 6 மருத்துவமனைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, 1,500 அறைகள் கொண்ட ஒரு மருத்துவமனை சனிக்கிழமை கட்டி முடிக்கப்பட்டது. அந்த மருத்துவனை ஐந்தே நாள்களில் கட்டப்பட்டுள்ளது என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டில் வூஹான் நகரில் கரோனா தொற்று முதல் முதலாகக் கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, இதே போன்ற துரித மருத்துவமனைகளை சீன அரசு கட்டியது நினைவுகூரத்தக்கது.

சீனா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 130 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அதில் 90 போ் ஹீபே மாகாணத்தைச் சோ்ந்தவா்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா். தற்போது கரோனா பாதிக்கப்பட்ட 645 போ் நாங்காங் மற்றும் ஷிஜியாஷுவாங் நகர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT