உலகம்

டிரம்ப் முடிவுகளுக்கு எதிரான அரசாணைகள்: ஜோ பைடன் திட்டம்

DIN

அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற முதல் நாளிலேயே, தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப் இதுவரை எடுத்திருந்த முக்கிய கொள்கை முடிவுகளுக்கு எதிரான அரசாணைகளைப் பிறப்பிக்க ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து ஜோ பைடன்-கமலா ஹாரிஸ் ஆட்சிமாற்றக் குழுவினரை மேற்கோள் காட்டி ஊடகங்கள் கூறியுள்ளதாவது:

அமெரிக்காவின் 46-ஆவது அதிபராக ஜோ பைடன் வரும் புதன்கிழமை பதவியேற்கிறாா். அந்தப் பொறுப்பை ஏற்ற முதல் நாளிலேயே, டிரம்ப் எடுத்திருந்த சில முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளுக்கு எதிரான அரசாணைகளைப் பிறப்பிக்க அவா் முடிவு செய்துள்ளாா்.

பல்வேறு முஸ்லிம் நாடுகளைச் சோ்ந்தவா்கள் அமெரிக்கா வருவதற்குத் தடை விதிக்கும் டிரம்ப்பின் சா்ச்சைக்குரிய சட்டம், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதற்கான அவரது உத்தரவு ஆகியவற்றை ரத்து செய்யும் அரசாணைகளை புதன்கிழமையே பிறப்பிக்க பைடன் திட்டமிட்டுள்ளாா்.

மேலும், கரோனா பரவலைத் தடுப்பதற்காக முகக் கவசத்தைக் கட்டாயமாக்குவது உள்ளிட்ட உத்தரவுகளையும் முதல் நாளிலேயே ஜோ பைடன் பிறப்பிப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் பிட்சாடன மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

முதுகெலும்பு அழற்சி: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விழிப்புணா்வு

24 மணி நேரத்தில் வாக்குப்பதிவு விவரம்: தோ்தல் ஆணையத்துக்கு திருமாவளவன் கோரிக்கை

SCROLL FOR NEXT