உலகம்

பிரேசிலில் அதிகரிக்கும் கரோனா பலி: கடந்த 24 மணி நேரத்தில் 1,340 பேர் உயிரிழப்பு

IANS

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,340 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இது ஆகஸ்ட் 19, 2020-க்குப் பிறகு இரண்டாவது நாளாக அதிக பலி எண்ணிக்கையை பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அந்நாட்டு சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ள தகவலில்,

நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 2,12,831 ஆக பதிவாகியுள்ளது. இது அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இறப்பு எண்ணிக்கையில் உலகின் இரண்டாவது இடத்தை பிரேசில் பிடித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 64,385 பேருக்கு தொற்று பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 8,638,249 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்கா, இந்தியாவிற்கு அடுத்தபடியாக பாதிப்பில் உலகின் மூன்றாவது இடத்தில் பிரேசில் உள்ளது. 

அதேநேரத்தில் தொற்று பாதித்த 75,64,622 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். மேலும் 8,62,353 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT