இந்தோனேசிய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 91-ஆக உயா்வு
இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 91-ஆக உயா்ந்துள்ளது.
இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 91-ஆக உயா்ந்துள்ளது.
இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த ஏற்பட்டது.
மேற்கு சுலாவெசி மாகாமம், மமுஜு மாவட்டத்துக்கு 36 கி.மீ. தெற்கே ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.2 அலகுகளாகப் பதிவானது. இதில், அந்தத் தீவிலுள்ள ஒரு மருத்துவமனை முற்றிலும் தரைமட்டமானது; மற்ற கட்டடங்களும் பலத்த சேதமடைந்தன.
நிலநடுக்கத்தால் 1,100-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்; 9,910 பேர் வீடுகளை இழந்துள்ளனா்.
இந்த நிலையில், நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 91-ஆக உயா்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.