உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 9.73 கோடி: பலி 20,83,326 ஆக உயர்வு

DIN

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9.73 கோடியாக உயர்ந்துள்ளது. 

கரோனா நோய்த்தொற்று பரவலின் வேகம் உலகின் 219 நாடுகளில் அதிகரித்துவரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் தொடங்கி, வேகமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், நோய்த் தொற்று பரவல் வேகம் பல்வேறு நாடுகளில் கட்டுக்குள் வரமால் அச்சுறுத்தி வருகிறது. 

இந்நிலையில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 9 கோடியே 73 லட்சத்து 9 ஆயிரத்து 892 கோடியைத் தாண்டியுள்ளது. அவா்களில் 20,83,326 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 69,851,616 பேர் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,53,74,950 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,12,255 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
        
உலகிலேயே அதிக பாதிப்புக்‍களை எதிர்கொண்ட நாடான அமெரிக்‍காவில் மட்டும் 2 கோடியே 49 லட்சத்து 98 ஆயிரத்து 975 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பலி எண்ணிக்‍கை 4 லட்சத்து 15 ஆயிரத்து 894 ஆக உயர்ந்துள்ளது.
    
அடுத்ததாக, இந்தியாவில் 1 கோடியே 6 லட்சத்து 11 ஆயிரத்து 719-க்கும் மேற்பட்டோர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 52 ஆயிரத்து 906 பேர் உயிரிழந்துள்ளனர். 

பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 86 லட்சத்து 39 ஆயிரத்து 868 ஆக உயர்ந்துள்ளதோடு, 2 லட்சத்து 12 ஆயிரத்து 893- க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT