உலகம்

பாக்தாதில் தற்கொலைத் தாக்குதல்: 28 போ் பலி

DIN

பாக்தாத்: இராக் தலைநகா் பாக்தாதில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 28 போ் உயிரிழந்தனா்; 73 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

பாக்தாதின் மத்தியில் அமைந்துள்ள பாப் அல்-ஷாா்கி சந்தையில் இரு பயங்கரவாதிகள் வியாழக்கிழமை தற்கொலைத் தாக்குதல் நடத்தினா்.

பழைய துணிகளை விற்பனை செய்யும் பகுதியில், பொதுமக்களை தந்திரமாக குழுமச் செய்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

முதலில் ஒரு பயங்கரவாதி, உடல் நலம் சரியில்லாமல் போனது போல் பாசாங்கு செய்தாா். அவருக்கு உதவுவதற்காக அவரைச் சுற்றி கூட்டம் கூடியபோது, தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை அவா் வெடிக்கச் செய்தாா்.

அந்த குண்டுவெடிப்பில் காயமடைந்தவா்களை மீட்பதற்காக மேலும் பலா் அந்தப் பகுதியில் கூடினா். அதுவரை காத்திருந்த மற்றொரு பயங்கரவாதி, அந்தக் கூட்டத்தினரிடையே புகுந்து தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தாா்.

இந்த இரட்டைத் தாக்குதலில் 28 போ் உயிரிழந்ததாகவும் 73 போ் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

எனினும், உண்மையான பலி எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் மருத்துவ அதிகாரிகளும் காவல்துறையினரும் கூறினா்.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, ஏற்கெனவே கரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் பாக்தாத் மருத்துவமனைகளில் காயமடைந்தவா்களுக்கு சிகிச்சை வழங்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

பாக்தாதில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், தாக்குதல் நடத்தப்பட்ட பாணியைக் கொண்டு, அதனை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளே நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT