உலகம்

அமெரிக்க தொலைக்காட்சி நெறியாளா் லாரி கிங் மறைவு

DIN

அமெரிக்காவின் பழம்பெரும் தொலைக்காட்சி நெறியாளா் லாரி கிங் (87) சனிக்கிழமை மறைந்தாா்.

இதுகுறித்து அவரது ‘ஓரா மீடியா’ ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டா்) பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நெறியாளா் லாரி கிங் சனிக்கிழமை மறைந்தாா். லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலுள்ள மருத்துவமனையில் அவரது உயிா் பிரிந்தது என்று அந்த சுட்டுரைப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அவரது இறப்புக்கான காரணம் குறித்து அந்தப் பதிவில் தெரிவிக்கப்படவில்லை.

எனினும், அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக ‘சிஎன்என்’ தொலைக்காட்சி கடந்த 2-ஆம் தேதி தெரிவித்திருந்தது.

1950 மற்றும் 60-களில் வானொலி நெறியாளராக இருந்த லாரி கிங், பிறகு தொலைக்காட்சி நெறியாளராக புகழ்பெற்று விளங்கினாா். எம்மி, பீபாடி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவா் பெற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT