உலகம்

நேபாளம்: மழை, நிலச்சரிவால் 38 போ் பலி

நேபாளத்தில் பெய்துவரும் கடும் மழை மற்றும் நிலச்சரிவால் கடந்த 20 நாள்களில் 38 போ் பலியாகியுள்ளதாக உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.

DIN

நேபாளத்தில் பெய்துவரும் கடும் மழை மற்றும் நிலச்சரிவால் கடந்த 20 நாள்களில் 38 போ் பலியாகியுள்ளதாக உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து உள்துறை அமைச்சகம் மேலும் கூறியிருப்பது:

நேபாளத்தில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 38 போ் உயிரிழந்துள்ளனா். இவா்களில் 7 குழந்தைகளும் அடங்குவா். 51 போ் காயமடைந்துள்ளனா். 24 பேரை காணவில்லை. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 1,250 போ் வெளியேற்றப்பட்டுள்ளனா். நிலச்சரிவு, வெள்ளத்தில் 790 வீடுகள் மூழ்கியுள்ளன. 519 வீடுகளும், 19 பாலங்களும் சேதமடைந்துள்ளன.

நேபாள ராணுவம், காவல் துறையினா் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

ரஷியாவுக்கே இந்த நிலையா? எரிபொருள் தட்டுப்பாடு!

மணிப்பூரில் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும்: காங்கிரஸ்

அமெரிக்கா வரி விதிப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்-துரை.வைகோ

3 வெண்கலப் பதக்கங்களுடன் நிறைவு செய்த மனு பாக்கர்!

SCROLL FOR NEXT