முகப்பு
உலகம்

ஜப்பானில் திடீர் நிலச்சரிவு: பலர் மாயம் (விடியோ)

ஜப்பானில் பெய்த கனமழையால் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதில், 19 பேரை காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 3 ஜூலை, 2021 at 1:50 PM
ஜப்பானில் திடீர் நிலச்சரிவு
பகிர்:


ஜப்பானில் பெய்த கனமழையால் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதில், 19 பேரை காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானின் அடாமி கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவால், அப்பகுதியில் இருந்த குடியிருப்புகள் அனைத்தும் மண்ணுக்குள் புதைந்தது. குடியிருப்புகளில் வசித்து வந்த 19 பேரைக் காணவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

மேலும், அப்பகுதியில் உள்ள அனைத்து மின் கம்பங்களும் சரிந்து விழுந்ததால் 200க்கும் அதிகமான வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மீட்புப் பணிகளை மேற்கொள்ள ராணுவத்தின் உதவியை அப்பகுதி அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.