உலகம்

அமேசான் தலைமைச் செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் பதவி விலகல்

DIN

அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஜெஃப் பெசோஸ் தனது பதவியிலிருந்து திங்கள்கிழமை விலகினார்.

ஜெஃப் பெசோஸ் பதவி விலகியதையடுத்து, புதிய தலைமை செயல் அதிகாரியாக ஆண்டி ஜெஸி நியமிக்கப்பட்டுள்ளார்.

இணையதளம் மூலம் 1994ஆம் ஆண்டு புத்தக விற்பனையை தொடங்கிய ஜெஃப் பெசோஸ், தற்போது தொலைக்காட்சி, கணினி என அனைத்து பொருள்களையும் இணையதளத்தில் விற்பனை செய்யும் நிறுவனமாக அமேசானை உருவாக்கியுள்ளார்.

அமெரிக்க தொழிலதிபரான ஜெஃப் பெசோஸ், 20,180 கோடி டாலர் சொத்து மதிப்புடன் உலகின் இரண்டாவது பணக்காரராக உள்ளார்.

அமேசான் நிறுவனத்திலிருந்து பதவி விலகியதையடுத்து, தனது ராக்கெட் தயாரிக்கும் நிறுவனமான ப்ளூ ஒரிஜன் நிறுவனத்தில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படி தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT