முகப்பு
உலகம்

ஜப்பான் நிலச்சரிவு: 20க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை; மீட்புப்பணி தீவிரம்!

ஜப்பானில் இரு தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 20க்கும் மேற்பட்டோரை இன்னும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:34 AM
பகிர்:

ஜப்பானில் இரு தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 20க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் தென்மேற்கே 90 கிமீ தொலைவில் உள்ள அடாமி நகரில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிலச்சரிவு ஏற்பட்டது. 

கடலோரப்பகுதி என்பதால் நிலச்சரிவின் பாதிப்பு அதிகமாக இருந்துள்ளது. பல வீடுகள் மண்சரிவில் புதைந்துள்ளன. 

இதில் இதுவரை 26 பேர் வரையில் மீட்கப்பட்டுள்ளனர். நான்கு பேரின் உடல் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

மீட்புப்பணிகளை துரிதமாக மேற்கொள்ள பிரதமர் யோஷிஹைட் சுகா சிறப்பு படை ஒன்றையும் அனுப்பியுள்ளார். காவல்துறை, தீயணைப்புத் துறையினர் மற்றும் ஜப்பானிய ராணுவத்தினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மண் சரிவு ஒரு சுனாமி போல் இருந்ததாகவும் அது ஒரு பயங்கர இடி போன்ற சத்தத்தை ஏற்படுத்தியதாகவும் மண்சரிவில் சிக்கி பிழைத்தவர் கூறியுள்ளார். 

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, மண்சரிவில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்ற மீட்புப் பணியாளர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகத் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →