உலகம்

ஸ்டேன் சுவாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஐநா மனித உரிமைகள் ஆணையம்

DIN

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியின் மரணத்திற்கு ஐநா மனித உரிமைகள் ஆணையம் இரங்கல் தெரிவித்துள்ளது.

எல்கா் பரிஷத் வழக்கில் தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனித உரிமை ஆா்வலரும், பாதிரியாருமான ஸ்டேன் சுவாமி (84) திங்கள்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார். 

அவரது மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையம் சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி மரணத்திற்கு இரங்கலைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மனித உரிமைகள் ஆணையத்தின் சுட்டுரைப் பக்கத்தில், “தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டிருந்த 84 வயதான மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஸ்டேன்சாமியின் மரணம் வருத்தத்தைத் தருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கரோனா தொற்று சூழலில் அடிப்படை ஆதாரமில்லாமல் சிறையில் பாதுகாப்பில்லாமல் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐநா மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் தடகள தேர்வு

மும்பை: விளம்பரப் பலகை அகற்ற ஓராண்டுக்கு முன்பே மனு! ஏன் நடவடிக்கை இல்லை?

மே 21-இல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!

இம்பாக்ட் பிளேயர் விதிமுறைக்கு ஆதரவும் எதிர்ப்பும்!

தமிழக பெண் காவல் அதிகாரி மத்திய தொழில் பாதுகாப்புப்படையின் உயர்பதவியில் நியமனம்!

SCROLL FOR NEXT