முகப்பு
உலகம்

ஸ்வீடனில் விமான விபத்து: விமானி உள்பட 9 பேர் பலி

ஸ்வீடனில் நேற்று இரவு ஏற்பட்ட விமான விபத்தில் விமானி உள்பட 9 பேர் பலியாகினர். 

உலகம்

ஸ்வீடனில் விமான விபத்து: விமானி உள்பட 9 பேர் பலி

ஸ்வீடனில் நேற்று இரவு ஏற்பட்ட விமான விபத்தில் விமானி உள்பட 9 பேர் பலியாகினர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

ஸ்வீடனில் நேற்று இரவு ஏற்பட்ட விமான விபத்தில் விமானி உள்பட 9 பேர் பலியாகினர். 

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிற்கு மேற்கே 160 கிலோமீட்டர் தொலைவில் ஒரேப்ரோ நகரில் விமானி உள்பட 9 பேருடன் சிறிய ரக விமானம் சென்று கொண்டிருந்தது. 

நேற்று இரவு 7 மணியளவில் ஒரேப்ரோ விமான நிலையம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து அடுத்த சில வினாடிகளில் தீ பற்றி எரிந்தது. 

விபத்தில், விமானத்தில் பயணம் செய்த விமானி மற்றும் 8 ஸ்கை-டைவிங் வீரர்கள் என 9 பேரும் உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் உயிரிழந்தோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →