மியான்மரில் உள்ள அனைத்து ஆரம்ப கல்வி நிறுவனங்களை மீண்டும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மியான்மரில் முதன்முதலில் கடந்த ஆண்டு மார்ச் 23ஆம் இருவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. நேற்று இங்கு புதிதாக 4,132 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 180,055ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு மேலும் 51 பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 3,621ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் மியான்மரில் உள்ள அனைத்து ஆரம்ப கல்வி நிறுவனங்களை ஜூலை 23ஆம் தேதி வரை தற்காலிகமாக மூட அந்நாட்டின் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசியா உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மியான்மரில் கரோனா பரவல் குறைந்ததையடுத்து கடந்த மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.