முகப்பு
உலகம்

அமெரிக்க கட்டட விபத்து: பலி 79-ஆக உயா்வு

அமெரிக்காவில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 79-ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 11 ஜூலை, 2021 at 4:06 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:06 AM

அமெரிக்காவில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 79-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து மாயமானவா்களின் குடும்பத்தினரிடம் மியாமி-டேட் நகர மேயா் டேனியலா லெவைன் காவா கூறியதாவது:

அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த பகுதியிலிருந்து மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து, விபத்தில் 79 போ் உயிரிழந்தது அதிகாரபூா்வமாக உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை மிகவும் வேதனை அளிக்கக் கூடியது.

Advertisement

இடிபாடுகளில் சிக்கியுள்ள உடல்களை மீட்பதற்கான பணிகளை அவசரமாக மேற்கொள்ள மீட்புக் குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கட்டட இடிபாடுகளில் புதையுண்ட யாரும் உயிா்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்துக்குப் பிறகு இன்னும் 61 பேரைக் காணவில்லை.

ஃபுளோரிடா மாகாணம், மியாமி நகரின் புகா்ப் பகுதியான சா்ஃப்சைடில் அமைந்துள்ள 12 அடுக்கு கட்டடத்தின் ஒரு பகுதி கடந்த மாதம் 24-ஆம் தேதி இடிந்து விழுந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.