உலகம்

சுவர்களுக்கு இடையே சிக்கிய நாய்; 5 நாள்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்பு (விடியோ)

ஓஹியோவில் இரண்டு சுவர்களுக்கு இடையே சிக்கிய நாயை 5 நாள்களுக்குப் பிறகு கண்டுபிடித்து தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். 

DIN

ஓஹியோவில் இரண்டு சுவர்களுக்கு இடையே சிக்கிய நாயை 5 நாள்களுக்குப் பிறகு கண்டுபிடித்து தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். 

அமெரிக்காவின் ஓஹியோ நகரில் வீட்டு நாய் ஒன்று தப்பித்துச் சென்றுவிட்டது. அதனைத் தேடும் முயற்சியில் வீட்டின் உரிமையாளர் ஈடுபட்டுள்ளார். 5 நாள்களுக்குப் பிறகு வீட்டின் அருகே நாய் அழும் சத்தத்தைக் கேட்ட வீட்டின் உரிமையாளர் அதனைத் தேடியுள்ளார். ஆனால் நாய் இருக்கும் இடத்தை அவரால் கண்டறிய முடியவில்லை. 

இதையடுத்து அவர், தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் வீட்டைச் சுற்றி தேடியதில், அருகிலுள்ள மற்றொரு வீட்டின் இரண்டு கான்கிரீட் சுவர்களுக்கு இடையே நாய் சிக்கியிருந்தது தெரிய வந்தது. 

பின்னர் ஒரு பெரிய சுத்தியலைப் பயன்படுத்தி சுவரில் பெரிய துளையிட்டு நாயை மீட்டுள்ளனர் தீயணைப்புத் துறையினர். 5 நாள்களுக்குப் பிறகு நாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT