உலகம்

ரஷியாவில் புதிதாக 24,072 பேருக்குத் தொற்று; மேலும் 779 பேர் பலி

DIN

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,072 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 779 பேர் பலியாகியுள்ளனர். 

ரஷியாவில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,072 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 61,26,541 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 3,406 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் கரோனாவால் இன்று 779 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 1,53,874 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி 4,82,033 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவிலிருந்து 18,678 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 54,90,634 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT