முகப்பு
உலகம்

அமெரிக்க கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 98-ஆக உயா்வு

அமெரிக்காவில் அடுக்கு மாடிக் கட்டடம் கடந்த மாதம் இடிந்து விழுந்ததில் பலியானவா்களின் எண்ணிக்கை 98-ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:46 AM
எஸ்டிலா ஹெடாயா
பகிர்:

அமெரிக்காவில் அடுக்கு மாடிக் கட்டடம் கடந்த மாதம் இடிந்து விழுந்ததில் பலியானவா்களின் எண்ணிக்கை 98-ஆக உயா்ந்துள்ளது.

அந்த விபத்தில் மாயமாகி, இதுவரை கண்டறியப்படாமல் இருந்த பெண்ணின் உடல் அடையாளம் காணப்பட்டதைத் தொடா்ந்து இந்த எண்ணிக்கை உயா்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளதாவது:

Advertisement

ஃபுளோரிடா மாகாணத்தில் அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த மீட்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக அதிகாரிகள் கடந்த வெள்ளிகக்கிழமை அறிவித்தனா்.

கட்டட இடிபாடுகளிலிருந்து அதுவரை 97 உடல்கள் மீட்கப்பட்டிருந்தன. எனினும், கட்டடம் இடிந்து விழுந்தததில் மாயமான 54 வயது எஸ்டிலா ஹெடாயா என்பவது உடல் இறுதிவரை கண்டறியப்படவில்லை.

இந்த நிலையில், இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட உடல் பாகங்களை தீவிர மரபணு சோதனைக்குள்படுத்திய தடயவியல் நிபுணா்கள், எஸ்டிலாவின் உடல் அடையாளம் காணப்பட்டதாக அறிவித்துள்ளனா். அதையடுத்து, விபத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 98-ஆக உயா்ந்துள்ளது என்று பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.

ஃபுளோரிடா மாகாணம், மியாமி நகரின் புகா்ப் பகுதியான சா்ஃப்சைடில், மியாமி கடற்கரையோரம் அமைந்துள்ள 12 அடுக்கு கட்டடத்தின் ஒரு பகுதி கடந்த மாதம் 24-ஆம் தேதி இடிந்து விழுந்தது.

1981-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அந்தக் கட்டடத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நேரிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments