உலகம்

‘மோசமான கரோனா தடுப்பு நடவடிக்கை’:மலேசிய பிரதமர் பதவி விலகக்கோரி இளைஞர்கள் போராட்டம்

DIN

மோசமான முறையில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டதாகக் கூறி மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் பதவி விலகக்கோரி கோலாலம்பூரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மலேசியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கரோனா தொற்று பரவல் அதிகரித்தவண்ணம் உள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டாலும் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறது.

இந்நிலையில் பிரதமர் முகைதீன் யாசின் பதவிவிலகக் கோரி தலைநகர் கோலாலம்பூரில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைகளில் பிரதமர் பதவி விலகக்கோரி எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர்.

பிரதமர் பதவி விலக வேண்டும், நாடாளுமன்ற நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க வேண்டும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடனுதவி கிடைக்கச் செய்வதை உறுதி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

மலேசியாவில் இதுவரை 11 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9000 பேர் தொற்று பாதிப்பினால் பலியாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT