முகப்பு
உலகம்

ஆப்கனில் ராணுவத் தாக்குதல்: தலிபான் தளபதி உள்ளிட்ட 18 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் அக்சா மாவட்டத்தில் வியாழக்கிழமை அந்நாட்டின் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தலிபான் தளபதி உள்ளிட்ட 18 பேர் கொல்லப்பட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
ஆப்கனில் ராணுவத் தாக்குதல்: தலிபான் தளபதி உள்ளிட்ட 18 பேர் பலி
பகிர்:

ஆப்கானிஸ்தானின் அக்சா மாவட்டத்தில் வியாழக்கிழமை அந்நாட்டின் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தலிபான் தளபதி உள்ளிட்ட 18 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினருக்கும், ராணுவத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் வடக்கு ஜவ்ஜ்ஜான் மாகாணத்தின் அக்சா மாவட்டத்தில் தலிபான் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக ஆப்கன் ராணுவத்தினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் இறங்கினர். 

அப்போது பதுங்கியிருந்த தலிபான் அமைப்பினர் மீது ஆப்கன் ராணுவத்தினர் விமானத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் தலிபான் அமைப்பின் தளபதி காரி முபின் உள்பட 18 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த ஒரு வாரமாக அக்சா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தலிபான் அமைப்பினருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.