இலங்கையில் உள்நாட்டு பயணக் கட்டுப்பாடு ஜூன் 14 வரை நீட்டிப்பு
கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்ட உள்நாட்டு பயணக் கட்டுப்பாடு, தற்போது ஜூன் 14 வரை நீட்டிக்கப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்ட உள்நாட்டு பயணக் கட்டுப்பாடு, தற்போது ஜூன் 14 வரை நீட்டிக்கப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளனர்.
தொற்று காரணமாக இலங்கையில் பயணக் கட்டுப்பாடு முன்னதாக மே 28 வரை விதிக்கப்பட்டு, ஜூன் 7 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. பிறகு தற்போது மீண்டும் அது ஜூன் 14 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராணுவ தளபதி மற்றும் நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் அமைப்பின் தலைவர் ஷவேந்திரா சில்வா செய்தியாளர்களிடம் இத்தகவலை தெரிவித்தார்.
Advertisement
அத்தியாவசிய மற்றும் உணவுச் சேவைகள மட்டும் இயங்க அனுமதிக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.