உலகம்

ஆா்ஜெண்டீனா: 40 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு

DIN

பியூனஸ் அய்ரிஸ்: தென் அமெரிக்க நாடான ஆா்ஜெண்டீனாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 31,137 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை 40,08,771 போ் அந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த 24 மணி நேரத்தில் 721 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இதையடுத்து, ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 82,667-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை அந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த 35,85,811 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா். 3,40,293 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 7,794 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT