முகப்பு
உலகம்

தென்னாப்பிரிக்காவில் ஒரேநாளில் 13,000 பேருக்கு கரோனா

தென்னாப்பிரிக்காவில் ஒரேநாளில் 13,000 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

தென்னாப்பிரிக்காவில் ஒரேநாளில் 13,000 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 13,246 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரிக்கு பிறகு அந்த நாட்டில் ஏற்பட்டிருக்கும் அதிகபட்ச பாதிப்பு இதுவாகும். 
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,74,312ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு ஒரேநாளில் 77 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 58,118ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 95,772 பேர் சிகிச்சையில் உள்ளனர். 
இதுவரை கரோனாவிலிருந்து 16,20,317 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 60,995 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை 1,23,31,837 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.