முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. 
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் மாவட்டத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மிங்கோரா நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டது. 
இது ரிக்டர் அளவில் 4.2ஆகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கடியில் 90 கிலோமீட்டர் ஆழத்தில் இந்து குஷ் மலையை நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது. 
எனினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. முன்னதாக ஜூன் 17ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4ஆகப் பதிவானது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →