உலகம்

மின்கட்டணம் செலுத்த புதிய திட்டம்: மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

DIN

மக்கள் மின்கட்டணம் செலுத்த ரீசார்ஜ் முறை கொண்டுவர மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை காலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. 

அந்தவகையில்  ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மின்கட்டணங்களை செலுத்த ரீசார்ஜ் முறையைக் கொண்டுவரவும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 

மேலும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயிகளுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வழி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. புதிய மின் பாதைகள் மற்றும் புதிய துணை மின் நிலையங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் பாரத்நெட் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் உள்ள 16 மாநிலங்களின் கிராமங்களை மின்பாதைகளின் மூலம் இணைக்க ரூ.19,041 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT