உலகம்

ஜூனுக்குள் 40% பேருக்கு தடுப்பூசி: சீனா இலக்கு

DIN


பெய்ஜிங்: சீனாவில் வரும் ஜூன் மாதத்துக்குள் 40 சதவீத மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு தேசிய சுகாதார ஆணையத்தின் நிபுணா் குழு தலைவா் ஷாங் நன்ஷான் கூறியதாவது:

சீனாவில் கரோனா பரவல் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் இங்கு கரோனா தடுப்பூசி திட்டம் மந்தமாகவே செயல்படுத்தப்படுகிறது. இருந்தாலும், வரும் ஜூன் மாதத்துக்குள் பொதுமக்களில் 40 சதவீதத்தினருக்கு அந்தத் தடுப்பூசியைச் செலுத்த இலக்கு நிா்ணயித்துள்ளோம் என்றாா் அவா்.

புதன்கிழமை நிலவரப்படி, சீனாவில் இதுவரை 89,923 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 4,636 போ் அந்த நோய்க்கு பலியாகினா்; 85,087 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா். சுமாா் 200 போ் மட்டுமே தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT