உலகம்

2011- சுனாமியின் போது ஜப்பானில் காணாமல் போன பெண்ணின் எலும்புக்கூடு மீட்பு; மகன் மகிழ்ச்சி

ENS


கடந்த 2011-ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட கடும் சுனாமியின்போது காணாமல் போன ஒரு பெண்ணின் உடல் சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிப்ரவரி 17-ஆம் தேதி அப்பெண்ணின் எலும்புக் கூடு மியாகி கடற்கரையோரம் கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

2011-ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி ஜப்பானைத் தாக்கிய சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட 61 வயது பெண்மணியான நட்சுகோ ஒகுயாமாவின் எலும்புக் கூடு அது என்று தடயவியல் மற்றும் மரபணு சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுனாமி ஏற்பட்டு சுமார் 10 ஆண்டுகள் ஆன நிலையிலும், இன்னமும் 2500 பேர் வரை காணாமல் போனவர்கள் பட்டியலிலேயே வைக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களின் உடல்களும் கிடைக்காமல் அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று தெரியாமல் ஏராளமான குடும்பங்கள் தவிப்பிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்தான், ஒகுயாமாவின் எலும்பைக் கண்டெடுத்தவருக்கு அவரது மகன் கண்ணீருடன் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். சுனாமியின் 10-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுவதற்குள், எனது தாயின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டதை நினைத்து நான் நிம்மதி கொள்கிறேன்.

இதனால், எனது தாய் இறந்துவிட்டார் என்று கதறி அழவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியும் என்கிறார் உணர்ச்சிப் பொங்க.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

SCROLL FOR NEXT