உலகம்

தில்லி விவசாயிகள் போராட்டத்தை அட்டைப்படமாக வெளியிட்ட அமெரிக்காவின் டைம் இதழ்

DIN

தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் பங்குபெற்ற பெண்களின் படத்தை பிரபல அமெரிக்க இதழான டைம் அட்டைப்படமாக வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 98 நாள்களாக தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல அமெரிக்க இதழான டைம் பத்திரிகையின் மார்ச் மாதத்திற்கான இதழின் அட்டைப்படத்தில் தில்லி திக்ரி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களின் படம் இடம்பெற்றுள்ளது. விவசாயிகள் போராட்டத்தின் முன்னணி வீரர்கள் என குறிப்பிடப்பட்டு இந்தப் படம் வெளியாகியுள்ளது.

போராட்டத்தில் பெண்கள் பங்குபெற வேண்டாம் என்கிற உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களைக் குறித்து டைம் இதழ் இந்த அட்டைப்படத்தை வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமைச் செயலகம் படத்தின் டீசர்

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

SCROLL FOR NEXT