முகப்பு
உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் பலி 

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் மளிகைக் கடை ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவலர் உள்பட 10 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Updated On : 23 மார்ச், 2021 at 2:57 PM
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் பலி 
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:19 AM

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் மளிகைக் கடை ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவலர் உள்பட 10 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

அமெரிக்காவின் பௌல்டர் நகரில் கிங் சூப்பர்ஸ் மளிகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் பிற்பகல் 2.30 மணியளவில் மர்ம நபர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். 

தகவலறிந்து நகரக் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர். மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல் அதிகாரி உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 

Advertisement

மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு குறித்து காவல்துறையினர் மர்ம நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.