உலகம்

மியான்மர் ராணுவ ஆட்சியில் இதுவரை 320 போராட்டக்காரர்கள் பலி

DIN

மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை 300க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் பலியாகியுள்ளதாக சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

மியான்மரில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் பிப். 1-ஆம் தேதி கவிழ்த்தது.

அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா். இதனை எதிா்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராய்டர்ஸ் தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் மூலம் மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் இதுவரை 320 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

பலியானவர்களில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலனவர்கள் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள செய்தி நிறுவனம் இதுவரை 3,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT