பலூசிஸ்தானின் குவெட்டாவில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு 
உலகம்

பாகிஸ்தானின் குவெட்டாவில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் தலைநகரான குவெட்டாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ANI

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் தலைநகரான குவெட்டாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு மாகாண அரசு ஞாயிறன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் குவெட்டாவில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்று கூடுவதற்குத் தடை விதித்துள்ளது. 

மேலும், சம்பள விவகாரம் தொடர்பாக ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் இந்த உத்தரவு பிறபித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை, போராட்டத்தில் பங்கேற்க ஏராளமான ஆசிரியர்கள் குவெட்டாவில் திரண்டனர். 

கடந்த மாதம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத் நகரில் சம்பள உயர்வு கோரி நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர்.

தேர்தல் பணிகள் உள்பட அனைத்து அரசு வேலைகளும் புறக்கணிப்பதாகவும், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரவை ஆசிரியர்கள் நிர்வாகம் வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண்டமனூரில் ஜன. 28-இல் மின் தடை

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

காளையாா்கோவிலில் மாட்டு வண்டிப் பந்தயம்

காளையாா்கோவிலில் மாநில கோ-கோ போட்டி தொடக்கம்

திண்டுக்கல்லில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

SCROLL FOR NEXT