உலகம்

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா திரும்புவோருக்கு சிறை தண்டனை அறிவிப்பு

DIN

அதிகரித்துவரும் கரோனா தொற்று காரணமாக மே 3ஆம் தேதிக்கு பிறகு சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வரும் சொந்த நாட்டு மக்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அதிகரித்துவரும் கரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் பலவும் இந்தியாவுடனான விமானப் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஆஸ்திரேலியா, ஹாங்காங், ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளும் இந்தியாவுடனான விமானப் போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன. 

இந்நிலையில் மே 3ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வர சொந்த நாட்டு மக்களுக்கு அந்நாடு தடை விதித்துள்ளது. நேரடியாக இந்தியாவிலிருந்து வராமல் வேறு நாடுகளின் வழியாக பயணிகள் ஆஸ்திரேலியா வந்தடைவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த உத்தரவை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது. 

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா செல்ல கடுமையான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ள நிலையில் வேறொரு நாட்டுக்கு சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்குள் நுழையும் மக்களுக்கு அபராதமும், சிறைதண்டனையும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT