முகப்பு
உலகம்

மெக்சிகோவில் இடிந்து விழுந்த மெட்ரோ ரயில் மேம்பாலம்: 20 பேர் பலி

வட அமெரிக்காவின் மெக்சிகோ நகரில் திங்கள்கிழமை இரவு மெட்ரோ பாலம் இடிந்து விழுந்த விபத்தில் இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:09 PM
மெக்சிகோவில் இடிந்து விழுந்த மெட்ரோ ரயில் பாதை: 13 பேர் பலி
பகிர்:

வட அமெரிக்காவின் மெக்சிகோ நகரில் திங்கள்கிழமை இரவு மெட்ரோ பாலம் இடிந்து விழுந்த விபத்தில் இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வட அமெரிக்காவின் மெக்சிகோ நகரில் உள்ள மெட்ரோ ரயில் பாதை திடீரென இடிந்து விழுந்தது. மெட்ரோ ரயில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென இடிந்து விழுந்த மேம்பாலத்தால் அதன் அடியில் நின்று கொண்டிருந்த மக்கள் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர். 

அருகில் இருந்த மக்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் காரணமாக அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. இந்த மேம்பால இடிபாடு விபத்தால் இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 49 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த விபத்து தொடர்பாக மெக்சிகோ காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →