உலகம்

உலகளவில் 15.49 கோடியைத் தாண்டிய கரோனா பாதிப்பு: பலி 32.41 லட்சமாக உயர்வு

DIN

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15.49 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 28.04 லட்சமாக அதிகரித்துள்ளது. 

கடந்த ஆண்டு இதே மாதத்தில் உலகையே அச்சுறுத்த தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, ஒரு ஆண்டுக்கும் மேலாக மக்களை துன்பத்தில் ஆழ்த்தி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 15,49,75,534 -ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 32,41,047 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

மேலும், 13,24,51,851 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 1,92,82,636 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,11,075 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,32,74,659  கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 5 லட்சத்து 92 ஆயிரத்து 409-ஆக உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,06,58,234 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனாவால் 2,26,169 பேர் உயிரிழந்துள்ளனர். 

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 1,48,60,812 -ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனாவால் 4,11,854 பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
 
தொற்று பாதிப்பில் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.  இதுவரை 2, 26,169 பேர் உயிரிழந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT