உலகம்

கரோனா பரவல் எதிரொலி: மாலத்தீவுகளில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

DIN

கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியா மற்றும் இதர தெற்காசிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மாலத்தீவுகள் அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக பல்வேறு நாடுகளும் இந்தியா உடனான போக்குவரத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இந்தியாவிலிருந்து செல்லும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக மாலத்தீவுகள் அரசு தெரிவித்துள்ளது. கரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மாலத்தீவுகள் அரசு தெற்காசிய நாடுகளுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது. 

எனினும் சுகாதார நிபுணர்களுக்கு இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மே 13ஆம் தேதி முதல் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT